Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைனில் 2 பேரிடம் பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

மிட்டாய் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- 2 பேர் கைது

​திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (59) .இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 9 ந் தேதி அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியிலிருந்த ரூ16,500 பணம் திருடப்பட்டிருந்தது.
​இது குறித்துகாந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து வரகனேரியைச் சேர்ந்த முகமது ஆசிப் (27) மற்றும் கார்த்திக் (19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை

​திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது45) என்பவரின் மனைவி சபரி ஜோதி (வயது41). இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் சபரி ஜோதி கடும் மன அழுத்தம் மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று வந்துள்ளார்.
​இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபரி ஜோதி புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சபரி ஜோதியின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து உரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்.

​ வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் 2 பேரிடம் ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி

​திருச்சி திருவரங்கம் திருவானைக்கோவலைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது37) என்பவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, கடந்த 6ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகம் என்ற பெயரில் ஒரு இணைப்பு வந்துள்ளது. அதில் அவரது வாகனத்திற்கு அபராதம் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
​அந்த இணைப்பைக் கிளிக் செய்து அபராதம் செலுத்த முயன்ற சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரு1 லட்சம் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து அவர் சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று ​திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஜிம் நடத்தி வருபவர் திருச்சி ஜே.கே. நகரைச் சேர்ந்த கணேஷ் (48). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சுப்பிரமணியபுரம் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ​கடந்த 8ம் தேதி அன்று வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றபோது, கணக்கில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக விசாரணை செய்த போது மர்ம ஆசாமிகள் சிலர் அவரது கணக்கிலிருந்து ரூ2.91 லட்சத்தை ஆன்லைன் மூலம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ்சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

​ 2.2 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் கைது..

​திருச்சி திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள புங்கனூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் ஆகஸ்ட் 10 அன்று சோதனையில் ஈடுபட்டனர். ​அப்போது 2.200 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து10 ஆயிரம் ஆகும். பிறகு போலீசார் திருவெறும்பூர் காந்தி நகரைச் சேர்ந்த மீனாட்சி (33) என்ற பெண்ணைக் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சக்திவேல் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!