Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றியது.

ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து மிசோரம் மாநிலத்தின் கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக  இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 11 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!