திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரூ. 30.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் கட்டுமானப் பணிகளை பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்
திருச்சி மாவட்டம் லால்குடி – அன்பில் சாலையின் குறுக்கே மணக்கால் கிராமத்தில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் கொப்பாவளி, ஆதிகுடி, வழுதியூர், அன்பில், அரியூர், செங்கரையூர், பூண்டி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சை உள்ளிட்ட பல உள்ளூர் கிராமங்களுக்கு செல்ல முடியும்.
திருச்சியில் இருந்து லால்குடி, அன்பில் வழியாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள்இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல்,
இந்த ரயில் பாதை வழியாக நாள்தோறும் 50 க்கும் மேற்பட்ட பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், இங்கு அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் நிலை இருந்து வந்தது. ஆதலால், இங்கு ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்துகோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 30 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2023 ம் ஆண்டு ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனால் திருச்சியில் இயக்கப்படும் பஸ்கள் லால்குடி, பூவாளூர், காட்டூர், கொப்பாவளி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக அப்பகுதியில் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்
450 மீட்டர் (அரை கிலோ மீட்டர்) நீளமும், 11 மீட்டர் (36 அடி) அகலம் கொண்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு ரயில்வே கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பில்லர் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ரயில் தண்டவாள பகுதியில் ரயில்வேத்துறை சார்பில் எல்லையில் கட்டப்பட வேண்டிய மீதமுள்ள பாலத்தின் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.
ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பணிகளை உடனே முடிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்
இதனைத் தொடர்ந்து, ரூ. 15 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ரயில்வே எல்லையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஒரு பெட்டுக்கு 12 பில்லர் போடப்பட்டு, அதை ஒன்றிணைத்து ராட்சத பில்லர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. தற்போது, 90 சதவீத பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
ஆனால், ரயில்வே எல்லையில் கார்டியரை கொண்டு அமைக்கப்பட வேண்டிய பாலப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால், திருச்சியில் இருந்து லால்குடி, அன்பில் நோக்கி செல்லும் பஸ்கள் தற்போது பூவாளூர், காட்டூர், கொப்பாவளி வழியாக அன்பில் சாலையை சென்றடைந்து 7 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரயில்வே மேம்பாலப் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கார்டியர் கொண்டுவரப்பட்டு ரயில்வே துறை சார்பில் மீதமுள்ள பணிகள் தெடங்கப்பட்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறித்தி உள்ளேன் என பெரம்பலூர் எம்பி அருண்நேரு தெரிவித்தார்
ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் பிரியதர்ஷினி, நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ஞாணமணி, நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சண்முகநாதன், பெரியய்யா ஆகியோர் உடனிருந்தனர்.
