Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கத்துவா மாவட்டத்தின் மேல்மட்ட பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!