Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனமழை- நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு

நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ல் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. வாகனங்கள் காலை 7 முதல் மாலை 6 மணி வரை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை வழியே அனுமதிக்கப்படுகிறது

கனமழை காரணமாக உதகையில் சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து 3வது நாளாக மூடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக 45 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!