மக்களவையில் தொகுதி மறு வரையறையை கொண்டு வரும் 131 வது சட்ட திருத்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் விதமாக நடைபெறும் இந்த தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து

வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் பல்வேறு கட்சியினரும் இணைந்து இன்று மசோதா சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பல்லடம் சாலையில் திமுக , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தொகுதி மறு வரையறை மசோதா சட்ட நகலை தீயிட்டு கொளுத்தி எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
