புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். ராஜ்குமார். இவர் கறம்பக்குடியில் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கறம்பக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் இன்று
கறம்பக்குடி நீதிமன்றத்திற்கு சென்று விட்டு தனது வாகனத்தில் வந்தபோது மயங்கி
விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என கூறப்பட்டது. வழக்கறிஞர் எம். ராஜ்குமார் மறைவுக்கு வழக்கறிஞர்கள்
இரங்கல் தெரிவித்தனர்
