Skip to content
Home » “லியோ” படம் முதல் நாள் ரூ. 120 கோடி வசூல்…அப்டேட்…

“லியோ” படம் முதல் நாள் ரூ. 120 கோடி வசூல்…அப்டேட்…

  • by Senthil
ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் படத்தின் இயக்குநரான லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.

தொடர்ந்து மற்ற மாநிலங்களில் படம் அதிகாலையே வெளியிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ குறித்த விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!