Skip to content
Home » லியோ பட தயாரிப்பாளர் இல்ல திருமண விழா…. நடிகர் விஜய் பங்கேற்பு.. படங்கள்…

லியோ பட தயாரிப்பாளர் இல்ல திருமண விழா…. நடிகர் விஜய் பங்கேற்பு.. படங்கள்…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த லியோ திரைப்படத்தை லலித்குமார் தயாரித்திருந்தார். அவரின் மகன் விஷ்ணு திருமணம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. அந்த விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனி, சதிஷ்,  கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா

நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்  குடும்பத்தினரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் விஜய் பங்கேற்றது தொடர்பான  போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லியோ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் தளபதி 68 என்ற பெயரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!