Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை- பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் விவசாய தோட்டங்களில் பெருமாள் கரடு பகுதியில் இருந்து சிறுத்தை விவசாய தோட்டத்தில் வளர்த்து வரும் கிடா ஆடு கன்று குட்டிகள் தொடர்ந்து தாக்கி கொன்று வருகிறது வனத்துறை சார்பில் தனியார் தோட்டங்களில் மூன்று கூண்டுகள் சிறுத்தை பிடிக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தை பாலு என்பவர் தோட்டத்தில் வளர்த்து வந்த கன்று குட்டியை அடித்துக் கொன்றது இரவு நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தாக்கும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகாலையில் பால் கறக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தாங்கள் சிறுத்தைகளை கண்டதாகவும் தற்போது இதன் அட்டகாசம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது வனத்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறுத்தை பிடிப்படாமல் உள்ளது தன் தோட்டத்து சாலைகளில் தாங்கள் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் இரவு நேரங்களில் வெளியே வர முடியவில்லை எனவும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து வரும்பொழுது அச்சமாக உள்ளது வனத்துறையினர் விரைந்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் .

error: Content is protected !!