Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை மாவட்டத்திற்கு நவ.20ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டத்திற்கு நவ.20ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடியானது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது. அதன்படி இந்தாண்டு 470 கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியை வரவேற்றனர். பின்னர் தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க தர்காவில் உள்ள ஐந்து மினராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 20 -ஆம் தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!