தமிழத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சரக்கு லோடு ஏற்றிவிட்டு திரும்பிய லாரிகள், ஆந்திர எல்லையில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னோக்கி செல்ல முடியாமல் நெடுஞ்சாலையிலேயே முடங்கியுள்ளன. சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், கடந்த 4 நாட்களாக உணவு மற்றும் குடிநீர் வசதியின்றி காட்டு பகுதியில் லாரி ஓட்டுநர்கள் பரிதவித்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் சிக்கிதவிக்கும் தங்களை அதிகாரிகள் மீட்க வேண்டும் என தமிழக லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவின்றி 4 நாட்கள் காட்டுப்பகுதியில் தவிக்கும் லாரி டிரைவர்கள்
