Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வருவாய் குறைந்த அரசு பஸ்கள் நிறுத்தம்!முதற்கட்டமாக 136 சேவைகள் குறைப்பு

வருவாய் குறைந்த அரசு பஸ்கள் நிறுத்தம்!முதற்கட்டமாக 136 சேவைகள் குறைப்பு

குறைந்த வருவாய் ஈட்டும் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை வேலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதன் மூலம் வருவாய் அதிகரிப்பதுடன் டீசல் செலவை குறைக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். முதல் கட்டமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே எல்லா நகரங்களிலும் உள்ள தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாங்களாகவே உயர்த்திவிட்டார்கள். குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பஸ் சேவைகள் ரத்து செய்துவிட்டால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாவார்கள்.போக்குவரத்துத்துறை என்பது சேவைத் துறை என்று அழைக்கப்படக்கூடிய சாமானிய மக்களுக்காக நடத்தப்படக்கூடிய துறை. இந்த துறைகளில் லாப நஷ்டம் தாண்டி மக்களுக்கு சேவை கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். லாப நோக்கத்திற்காக அரசு பஸ் சேவைகளை குறைப்பது என்பது நிச்சயம் மக்களுக்கு எதிரானது என இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

error: Content is protected !!