Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

கரூரின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். எனினும், கடந்த மாதத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, சட்டமன்ற ஓட்டுப்பதிவின் போது இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை

மேற்கொண்டு, எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலாளராக கமலக்கண்ணனை நியமித்தார். அன்றிலிருந்து கரூர் மாவட்ட அதிமுகவுக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்தது.

கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த அடுக்கடுக்கான அரசியல் நகர்வுகளின் உச்சக்கட்டமாக, இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது இந்த முடிவை அடுத்து,

கரூர் மனோர ரவுண்டானம் பகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அதிமுகவுக்கு துரோகம் செய்த துரோகி கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்” என்று புதிய மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கட்சியினர் இந்த எதிர்ப்புக் கொண்டாட்டத்தின் போது முழக்கமிட்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில்:
கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கரூர் மாவட்டத்தில் அதிமுக தோல்வியைச் சந்தித்ததற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரே காரணம் என்றும், அவர் தொண்டர்களிடையே வெறுப்பை மட்டுமே சம்பாதித்து வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினர்.
“எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகியதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வரவிருக்கும் கரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை என்றுமே இரட்டை இலைக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகம்.”
இளைய தலைமுறைக்கு வாய்ப்பு”எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்போதுமே இளைய தலைமுறையினருக்கு வழிவகை செய்து ஆதரவளிப்பவர்.”

கரூரில் அண்மையில் நடந்த ஒரு துயர சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இன்று வரை கரூர் மாவட்டத்திற்கு வரவில்லை. இவ்வளவு பெரிய துயரச் சம்பவத்திற்கும் வராத ஒரு முதல்வராக அவர் இருக்கிறார். ஆனால், தவெக தலைவரும், (மாற்று) முதல்வருமான விஜய் அவர்கள், கடந்த ஒரு மாதமாகப் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்; வரும் ஜூலை மாதத்தில் கரூர் மாவட்டத்திற்கும் வரவுள்ளார்” என்று சுட்டிக்காட்டினர்.

“சட்டசபையைப் பொறுத்தவரை மக்கள் கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முதல்வரும் ஒருவரை ஒருவர் மட்டுமே புறம் பேசி (விமர்சித்து) வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினர்.

error: Content is protected !!