Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நிதித்துறையைத் தற்காலிகமாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கவனிப்பார் என்றும், பின்னர் அது தேசியவாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

62 வயதான சுனேத்ரா பவார், தற்போது மேலவை உறுப்பினராக (MP) உள்ளார். அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்பதால், அவரது மேலவை உறுப்பினர் பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார். பாராமதி தொகுதியைத் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காவாக மாற்றியதில் சுனேத்ரா பவாருக்கு முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!