திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வருவது வழக்கம். அதன்படி இம்மாதம் 26 தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கான திரியை தயாரிக்கும் பணிகளில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 300 மீட்டர் நீளமுள்ள திரிகள் தயாரிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணி நூல்கள் வைக்கப்பட்டு அதனை 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடுக்கி பெரிய துணிகள் வைத்து அதைக் கட்டி உச்சி பிள்ளையார் கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைக்க உள்ளனர். இந்த திரி தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து உடனடியாக அவற்றை பணியாளர்களை கொண்டு அவற்றை தீபம் ஏற்றும் கொப்பரைகள் வைக்கும் பணிகள் துவங்கும். அதனை தொடர்ந்து அந்த கொப்பறையில் சுமார் 700லிட்டர் இழுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் ஊற்றப்பட்டு சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த எண்ணெயில் அந்த திரிகளை ஊற வைப்பார்கள். பின்னர்
26ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தின் பின்னர் திருச்சி மலைக்கோட்டையில் இந்த தீபம் ஏற்றப்படவுள்ளது.
இதற்கான பணிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில் பிரமாண்ட தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணிகள் தீவிரம் – 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.