Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு!

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக மத்திய பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய பாகம் போலீசார், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தவர் தூத்துக்குடி மட்டக்கடை வாடித் தெருவைச் சேர்ந்த ஜெக பிரதாபன் மகன் நிரஞ்சன் வாஸ் (52) என்பது தெரியவந்தது.

மேலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர், சாலையோரங்களில் பேனாவால் பேப்பரில் ஏதேனும் எழுதியபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link