Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற நபர் கைது

திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது47) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர் . அவரிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது

திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதாக கடந்த 23ஆம் தேதி திருவரங்கம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 53) என்பவரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கடந்த 23 ந்தேதி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தஎடத்தெரு பகுதியை சேர்ந்த ஜான் எம்மில் கிறிஸ்தவ (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 6 போதை மாத்திரைகள் ஊசிகள் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

மூதாட்டியை தாக்கியவர் கைது

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியில் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 76 ). இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்த் (வயது 41.) ஆனந்த் மது போதையில் அடிக்கடி இப்பகுதியில் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து தனலட்சுமி கேட்கவே , அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

திருச்சி உறையூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் குமரன் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுன் பஸ் மூலம் தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பர்சில் 30 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூபாய் ஆயிரம் பணம் வீட்டு சாவி ஆகியவை பர்சுடன் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் குருவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகவதி (வயது 60. ) இவர் திருச்சி திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு சாலையில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து அவரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!