போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது
திருச்சி ஜூலை 27- திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட
குட்டிமலை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சத்யராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 24) என்ற வாலிபர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி ஜூலை 27- திருச்சிபெரிய மிளகு பாறை அருகே உள்ள கோரிமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கருமண்டபம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் கைது செய்தனர்.
இதேபோன்று செல்வ நகர் காந்தி தெரு ரேஷன் கடை அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெரிய மிளகு பாறை சேர்ந்த ராஜ்கண்ணன் (வயது 31), அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் அமலாபுரத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அரியமங்கலம் அண்ணா நகர் பகுதி பை சேர்ந்த கார்த்தி (வயது 32) என்பவர்ரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். திருச்சி தென்னூர் இபி ரோடு பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மற்றொரு கார்த்தி (வயது 32) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், ராஜ், கார்த்தி, கண்ணன் மற்றொரு கார்த்தி ஆகிய 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
எடமலைப்பட்டி புதூரில் ..கூலித் தொழிலாளி மாயம்
திருச்சி ஜூலை 27- திருச்சி எடமலைப் பட்டிபுதூர் கொல்லங்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 28) இவர் கூலி தொழிலாளி கடந்த 26 ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துச் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தாய் ராணி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி ரெட்டமலை ரோடு ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டிதுரை (வயது 27) ராமச்சந்திர நகர சேர்ந்த கெவின்ராஜ் (வயது 20) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இவற்றின் மதிப்பு ரூபாய் 35 ஆயிரம் ஆகும்.
