Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் போக்சோவில் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலையரசன்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று 30ம் தேதி போட்டோ வழக்கில் கைது செய்யப்பட்ட கலையரசனுக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 17,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல்நிலைக் பெண் காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.கார்த்திகேயன் பாராட்டினார்.

error: Content is protected !!