சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் இரயிலில் ஏற முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் கால் தவறி கீழே விழுந்ததில் ரயிலின் அடியில் சிக்கினார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) உடனடியாக செயல்பட்டு, அவரை பிடித்து இழுத்து சாதுரியமாக காப்பாற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அவர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
