திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசின் சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ள நிலையில், மின்சார பேருந்துகள் மற்றும் நந்தகம் செயலி உள்ளிட்ட புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார். இதையொட்டி, திருமலை முழுவதும் பல வண்ண மின்விளக்குகளாலும் அரிய மலர்களாலும் தேவலோகம் போல பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
