அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள நண்பர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் அமர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் அந்த வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தனர். இறந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் என அடையாளம் காணப்பட்டனர்.
ரயில் டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றும் இந்த விபத்தைத் தவிர்க்க முடியவில்லை என நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் எதற்காக ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோவில், சம்பவத்திற்கு சற்று முன்பு அந்த இருவரும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தது தெளிவாக தெரிகிறது.
அந்த இருவரும் அதிக போதையில் இருந்ததால், நெருங்கி வரும் ரயில் உடனடி ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணராமல் இருந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள், 2024ல் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
