திருவொற்றியூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறு 32 வயது வாலிபர் பவித்ரன் கொலை
வீட்டிலிருந்தவனை அழைத்து வந்து கொலை செய்து விட்டதாக பவித்திரனின் தாய் கதறல்
ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற முன்விரோதப் பகையினால் தன் மகனை வெட்டி சாய்த்து விட்டார்கள் அவர்களை குடும்பத்துடன் கைது செய்யாவிட்டால் சடலத்தை வாங்கப்

போவதில்லை என ஆவேசம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் 11 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் திருவொற்றியூரில் மேலும் ஒரு கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வன்னியர் தெரு பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 32 வயது வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வன்னியர் தெரு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த பவித்ரன் என்பவனை கூட்டாளிகள் ஐந்து பேர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
பவித்ரன் வன்னியர் தெரு பகுதியில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தாய் தந்தை தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில்
தற்பொழுது வீடு மாறி திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருகிறார்
இந்நிலையில் கூட்டாளிகள் சகவாசம் நிறைந்த பவித்ரன் தினமும்
ஏற்கனவே குடி இருந்த வன்னியர் தெரு பகுதியில் இரவு நேரத்தில் அரட்டை அடிப்பதும் மது அருந்துவதும் என அட்டகாசங்கள் நடைபெற்று வந்தன
இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த பவித்திரனை நண்பர்கள் மது அருந்துவதற்காகஅழைத்து வந்துள்ளனர்
பத்துக்கும் மேற்பட்டவர்கள் வன்னியர் தெரு பகுதியில் மது அருநதி கொண்டிருந்த பொழுது
இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் சராமரியாக பவித்ரனை தாக்கியுள்ளது.
மேலும் தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு துடிதுடித்த பவித்ரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்
அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே மர்ம நபரகள் தப்பி ஓடி உள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார்
பவித்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தகவல் அறிந்து ஓடிவந்த பவித்திரனின் தாயார் உடலைப் பார்த்து கதறி அழுதார்
வீட்டில் இருந்தவனை அழைத்து வந்து வெட்டி சாய்த்து விட்டார்கள் இதற்கு காரணம் முன்விரோதம் தான் குற்றம் சாட்டினார்
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே பகுதியில் திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக
திருமண மண்டபத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்து
போலீசாருக்குபணத்தை கொடுத்து தனது மகனைஅடித்து அனுப்பியதாகவும்
அந்த முன்விரோதம் பகை காரணமாக கூலிப்படைகளை வைத்து கொலை செய்து இருப்பதாக குற்றம் சாட்டினார்
இதற்கு திருமண மண்டபத்தின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இதற்கு காரணம் என ஆவேசமாக குற்றச்சாட்டை வைத்தனர்
மேலும் சந்தேகத்துக்கிடமாக இருக்கும் நபர்கள் குறித்து அவரது பெற்றோர் கூறியதை போலீசார் காது கொடுத்து கேட்க வில்லை என போலீசாருடன் உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது
இரவு நேரத்தில் நாய் பூனைகளுக்கு உணவுகள் எடுத்து வந்து உணவளிக்கும் பழக்கம் கொண்ட மகனை கொலை செய்து விட்டார்களே என்று அவரது தாய் கதறும் காட்சி மனதை பதைபதைக்க வைத்தது
வன்னியர் தெரு பகுதியில் தினமும் கஞ்சா போதை வஸ்துகள் பயன்படுத்தி கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அட்டகாசங்களும் அரட்டைகளும் அரங்கேறி வருவதை யாரும் இதுவரை கண்டு கொள்ளாததால் இது போன்ற கொலை அரங்கேறி இருப்பதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்
திருவொற்றியூரில் இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
