திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் கடந்த 14 ம் தேதி வீட்டை விட்டு ஓடி மதுரை அருகே இலுப்பைக் குளத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்துள்ளனர்.

