தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், நமது மாநிலத்திற்குத் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். தமிழர் உரிமையையும் காக்க சங்கரலிங்கனார் கொண்ட உறுதியும், தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும் என்று கூறியுள்ளார்.
தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்.. முதல்வர் விஜய் மரியாதை
