துருக்கியின் கிழக்குப் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 5.1 ரிக்டர் அளவில் பதிவு
