ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.எல்.ராஜா முறையீடு செய்துள்ளார். சிறுமிகளின் வீடியோக்கள் வெளியாகியுள்ளதால், வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், “இதுதொடர்பாக முறையாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது
வீரமணி பாலியல் வழக்கு.. சிபிஐ விசாரணை கோரி முறையீடு
