குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கவர்கள் அதிகளவில் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கடுமையான கரும்புகை மூட்டமாக மாறியுள்ளது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பிற தொழிற்சாலை ஊழியர்கள் சுவாசிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
கூடுதல் தீயணைப்பு வாகனங்கள்: தீயின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள பிற தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக குடோனில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிகிறது. விபத்து நடந்த போது உள்ளே ஊழியர்கள் யாராவது சிக்கியிருந்தார்களா என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
