Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் பிரிட்ஜ் வெடித்ததில், அருகிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் தாக்கம் 10 மற்றும் 12-வது மாடிகளுக்கும் பரவிய நிலையில், அறையில் சிக்கியிருந்த சிறுமியை பெற்றோர் பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஸ்கை லிஃப்ட் வாகனம் மூலம் தீயை கட்டுப்படுத்திய நிலையில், லேசான காயமடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!