Skip to content
Home » ” மாவீரன்”திரை விமர்சனம்……. படம் வேற லெவல்….!..

” மாவீரன்”திரை விமர்சனம்……. படம் வேற லெவல்….!..

  • by Senthil

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது ‘மாவீரன்’ திரைப்படம் உருவாக்கியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

 

இந்நிலையில் இப்படமானது சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு, படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி, சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் எப்படி என பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே தொகுப்பாக பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற சீமராஜா படத்திலேயே முயற்சி செய்திருந்தார். பீரியட் போர்ஷன் எல்லாம் கஷ்டப்பட்டு நடித்தாலும் அவருக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. அதே போல சூப்பர் ஹீரோவாக பேட்மேன் ஸ்டைலில்

Maaveeran Twitter Review and Reactions are here

ஹீரோ படத்தில் நடித்தார். அந்த படமும் அவரை கைவிட்டது. இந்நிலையில், பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயனை இந்த மாவீரன் படம் மாற்றி உள்ளது என ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் “படம் வேற லெவலில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் “சிறப்பான தரமான சம்பவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றோர் நபர் கூறுகையில் “பயனற்ற படம். தொடர்ச்சியான காட்சிகள் மற்றும் க்ரிங் பாடி ஷேமிங் காமெடி, மடோன் அஷ்வினிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும் இத்தகைய விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது அதிகளவில் பாசிடிவ் கருத்துக்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றமை தெளிவாகின்றது. ஆகவே படம் வெற்றியடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!