Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு  கோடை வெயில் மிக கடுமையாக கொளுத்துகிறது.  கடந்த வாரம் ஈரோட்டில்  109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுவே தமிழகத்தில் இந்த கோடைக்கான அதிகபட்ச வெப்பமாக  இருந்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக   தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை  உச்சபட்ச வெப்ப அலை வீசும்.  அப்போது  வெப்பநிலை 115 டிகிரி பாரன் ஹீட் வரை  வெப்பம் பதிவாகலாம். தமிழகத்தின் வட உள்மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் , சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில்  இந்த வெப்ப அலை வீசும் . மே 5ம் தேதி உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!