Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…. பொதுவிநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பொது விநியோகத்தை பாதுகாத்திடவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் மாநில செயலாளர் ராசப்பன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய்வதை வாபஸ் வாங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2015 வரை கொள்முதல் நிலையங்களில் பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அமுதம் ரேஷன் கடைகளை கூட்டுறவுத்துறை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க முயற்சிக்கக் கூடாது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!