Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. 9-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி,

பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, இனிய பிறமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, பரிமள ரெங்கா என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் மேற்கொண்டனர். தேர் நான்கு வீதிகளைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!