Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான, இங்கு பங்குனி உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பரிமள ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ராஜ அலங்காரத்தில் புஷ்ப பலத்திற்கு எழுந்தருளினார். பல வகையான மலர்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பள்ளக்கில் பெருமாள் எழுந்தருளியதும் சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் புஷ்ப பல்லக்கு வலம் வந்தது. முன்னதாக கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!