Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர்
திரு.வீர்பிரதாப் சிங் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணி செய்த 10மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2000 வீதம் ரொக்கம்

மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி, பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள் , பணியாளர்களின் குழந்தைகள் 6 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மேயர் அன்பழகன் வழங்கி பாராட்டினார்கள்.மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி

வார்டுகுழு அலுவலகம், நகநலமையம், உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதாரஅலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட31 நபர்களை கௌவுரவித்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, இவ்விழாவில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும்

எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் மேயர் மு.அன்பழகன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தை அருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை ஆணையர் அஜீதா பர்வீன், நகரப் பொறியாளர் அண்ணாத்துரை, மண்டலத்தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் காத்திகேயன், , மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!