Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை  கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 124 மைல் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் வெளுத்து வாங்கியது. புயலால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.புயல், மழையால் கிட்டத்தட்ட 1,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி மயோட் நிர்வாகி பிரான்காயிஸ் சேவியர் பியூவில்லி கூறுகையில், ‘புயல் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் கூடஇருக்கலாம். இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!