மின்வாரிய தொழிற்சங்கத்தின் முதன்மை கோரிக்கையான விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மதிமுக சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் வரும் 25-ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் மதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
