Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

மேகதாது அணை தொடர்பாக பெங்களூரில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார் என வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் .

கும்பகோணத்தில் வணிகவரித்துறை அலுவலகம், அரசு பொது மருத்துவமனையில் ஆய்வகம் ஆக்கியவற்றை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று திறந்து வைத்தார் .

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் வினோத் .

மேகதாது அணை தொடர்பாக பெங்களூரில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் முதல் வாரம் பெங்களூர் செல்வதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

மேலும் கடந்த இரு மாதத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது அந்த தண்ணீரை கேட்டு பெறுவாரா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழகத்தின் உரிமையை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம் என வினோத் தெரிவித்தார்.

error: Content is protected !!