Skip to content

மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதையாகும். இதன் இரு ​புறமும் நேபாள, வங்​கதேச எல்​லைகள் அமைந்​துள்​ளன. வடபகு​தி​யில் பூடான் எல்லை உள்​ளது. சீனா மற்​றும் வங்​க தேசத்​தால் சிலிகுரி பாதைக்கு தொடர்ந்து அச்​சுறுத்​தல் நீடிக்​கிறது. இதை எதிர்​கொள்ள அங்கு பூமிக்கு அடி​யில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் காணொலி வாயி​லாக நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வடகிழக்கு மாநிலங்​களை​யும் இந்​தி​யா​வின் பிர​தான பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் சிலிகுரி பாதை​யில் 40 கி.மீ. தொலை​வுக்கு பூமிக்​கடி​யில் ரயில் பாதை அமைக்​கப்பட உள்​ளது. இது பாது​காப்​பு ரீ​தி​யாக மிக​வும் முக்​கிய​மான திட்​ட​மாகும். மேலும் தற்​போது இந்த வழித்​தடத்​தில் உள்ள ரயில் தடத்​தை, 4 வழித்தட​மாக மாற்​ற​வும் முடிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது’ என்றார்.

error: Content is protected !!