Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி  கீழ குமரேசபுரத்தில் அமைச்சரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இரந்தது.

இன்று காலை அதில் ஒரு பேனல் கிழிக்கப்பட்டு இருந்தது. பிளேடு போன்ற ஊர்மையான ஆயுதத்தால் அது கிழிக்கப்பட்டு இருந்தது.  இதைப்பார்த்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் வருகைக்காக வைக்கப்பட்டு இருந்த பேனரை  கிழித்தது யார், ஏன் கிழித்தார்கள் என்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கீழகுமரேசபுரம் பகுதியில்  விசாரித்தபோது,  திமுக பேனர் கிழிக்கப்பட்டு இருந்தால் ஒரு காலத்தில்  அதிமுகவினர் மீது சந்தேகப்படுவார்கள். இப்போது அப்படி சொல்ல முடியாது. காரணம் ஒவ்வொரு கட்சியிலும் பல கோஷ்டிகள் உள்ளது. ஒரு கோஷ்டி வைக்கும் பேனரை அதே கட்சியை சேர்ந்த  இன்னொரு கோஷ்டியே கிழிக்கும் நிலை உள்ளது. எனவே  இது குறித்து  யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்றனர்.

திமுக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அதை வைத்த நிர்வாகிகள் மத்தியில்  கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!