Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிஷன் ஒலிம்பிக் 2036: சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் நியமனம்

மிஷன் ஒலிம்பிக் 2036: சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் நியமனம்

2036 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இப்போட்டியில் உள்ளன.

இந்த சூழலில் 2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் குறைந்தது 15 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

இதற்காக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த IPS அதிகாரியான தடகள வீரர் மயில்வாகனன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாகவும், இணை முதன்மை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன் திருச்சி துணை ஆணையர், ராமநாதபுரம், வேலூர் மாவட்ட எஸ்.பி., போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

error: Content is protected !!