கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலையில் உள்ளார்.
234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது. அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருந்து வருகிறது. குறிப்பாக திமுகவின் கோட்டையாக இருந்த வந்த தலைநகர் சென்னையை இந்த சட்டசபை தேர்தலில் தவெக தன்வசப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 2,529 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். 5வது சுற்றுகள் முடிந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
