Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்​தார்.

இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு இளையராஜா சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி மாபெரும் சாதனை படைத்ததாகக் கூறி பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் எனவும் கூறியிருந்தார்.

சினிமா இசையமைப்பாளர் இளையராஜா கடந்த   8 ம்தேதி  லண்டனில்  சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.  இந்தியர் ஒருவர் சிம்பொனி அரங்கேற்றம் செய்வது இதுவே முதல்முறை.  இதற்காக இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து  தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று  டில்லி சென்ற இளையராஜா, பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!