Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.. திருச்சியில் நூதன மோசடி

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அன்னை நகரை சேர்ந்த சாம் என்ற ஜெத்ரோ (25) என்பவர் தான் போலீஸ் என்றும் நான் திருச்சியில் வேலை செய்கிறேன் என்று கூறி நட்பாக பழகி உள்ளார். பின்னர் அவர் தனது செல்போனில் ஜி பே சரியாக வேலை செய்வதில்லை என்று கூறி அவரிடமிருந்து ரூ 1000 பெற்றுள்ளார். சம்பவத்தன்று சாம் ஜெத்ரோ முகமது காயை தொடர்பு கொண்டு ஏலத்தில் இருசக்கரம் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணம் ரூ 1000 அனுப்பு மாறும் கூறியுள்ளார்.இதனை நம்பிய முகமது காயிப் அவருக்கு செல்போன் மூலம் ரூ.1000 அனுப்பி உள்ளார். இதையடுத்து சாம்ஜெத்ரோ வாங்கிய பணத்தையும், இரு சக்கர வாகனத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது காயிப் இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம் ஜெரோவை கைது செய்தனர்.

error: Content is protected !!