சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறுகிய நேரத்தில் நகரின் ஆங்காங்கே திடீர் கனமழை வெளுத்து வாங்கும் என்றும், குறிப்பாக மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், சென்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வலுப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம்-பிரதீப் ஜான்!
