Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே மின்னல் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் இன்று அதிகாலை இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் மின்னல் தாக்கியதால் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மின்னல் தாக்கமே உயிரிழப்புக்குக் காரணம் என கூறினர்.

ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!