தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை (விடுமுறை தவிர்த்து) 4 நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, புதிதாக களம் காணும் தவெக. மேலும், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 100 வேட்பாளர்கள் 108 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்றைய நாளில் 83 வேட்பாளர்களில், நான்கு பேர் திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில், 79 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். தற்போது சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
