Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே மகளுடன் கிணற்றில் குதித்த தாய் – இருவரும் பலி

கரூர் அருகே குடும்பத் தகராறு: 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை – இருவரும் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 36 வயது பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ரேகா (36) என்பவர், மேடை நாடகக் கலைஞரான தனது கணவர் மகேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ரீனுஸ்ரீ (7) என்ற மகள் உள்ளார்.

இன்று காலை உறவினர்கள் ரேகா வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர் வீட்டில் யாரும் இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில்

ரேகா தனது மகளுடன் குதித்து தற்கொலை கொண்டது தெரிய வந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளியணை போலீசார், இருவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக ரேகா தனது செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் செய்தியின் விவரம் மற்றும் குடும்பப் பிரச்சினையே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தாய் மற்றும் மகளை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் மற்றும் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் கருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!