Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில்  கிராமத்தைசேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார்

வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.  குற்றவாளிகளுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்த சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதனையடுத்து சிவமணிகண்டனை கொலை செய்த 3 பேரை தனிப்படையினர் தொடர்ந்து
தேடிவந்தனர்.  அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன், பரமேஸ்வரன், ராகுல் ஆகிய மூன்று பேரும் இன்று ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!